9/02/2009

வருகிறது ”2012”














இவன் யார்டா இவன்.அதுதான் இன்னும் 3 வருடத்தில் வருகிறதே என்கிறீர்களா?

ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இவ்வருடம் November 13 (இந்த வருடத்தின் மூன்றாவது Friday the 13th) அன்றும் ”2012” வருகிறதென்று???

Colombia Pictures வெளியீடாக வரும் ஒரு திரைப்படமே இந்த “2012”. Independence Day மற்றும் The Day After Tomorrow ஐ தந்த இயக்குனரான Roland Emmerich ன் இன்னுமொரு பிரம்மண்டமான படைப்பே இது. இப்படத்தின் முன்னொளியை பார்க்கும் போதே படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது.

2012 ல் யார் உயிர் பிழைப்பார் என மிரட்டுகிறது “2012” ன் உத்தியோகபூர்வ இணையத்தளம்

சில நாட்களுக்கு முன்தான் இந்த “2012” பெரும் புரளியை கிளப்பிவிட்டிருந்தது.அதாவது இவ்வுலகிலேயே மிக தொன்மையான நாகரீகமான மாயன் நாகரீகத்தில் உருவான ஒரு நாட்காட்டியாலேயே இவ்வளவு பிரச்சனைகளும்.காரணம் அந்த நாட்காட்டி 2012 December 21 உடன் முடிவடைவதுதான்.

அதனால் அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்று சில கருத்துக்கள் உலாவுகின்றன. மாயன் நாட்காட்டியில் உள்ள இது தொடர்பாக விக்கியிடம் கேட்டபோது 5125 வருடங்களை கொண்ட மாயன் நாட்காட்டியில் தற்போது நடந்து கொண்டிருப்பது 5122 வது வருடத்தில்.

இதற்கு முதல் சில இயற்கை அனர்த்தங்கள் மாயன் நாட்காடியில் குறிப்பிட்டது போல கிட்டத்தட்ட அந்தந்த திகதிகளில் நடந்திருக்கிறதாம்.அதனால்தான் மாயன் நாட்காட்டி முடிவடைவதுடன் உலகம் அழிந்துவிடும் என்று புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார் போலும்.

எது எவ்வாறாயினும் நல்லதாகவே நடக்கட்டும் என பிரார்த்திப்போமாக....

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP