8/25/2009

இலங்கையின் இளையபதிவர்

முதலில் இந்த வலைப்பூவை முதலில் சென்று முழுமையாக வசித்து விட்டு மேலே தொடரவும்.



இந்த
வலைபூவை பதிபவர் கொழும்பு D.S. சேனாநாயக்க கல்லூரியில் தரம் 6 கல்விபயிலும் மாணவன் யசீர் நிஸாருதீன்
.அண்மையில் இடம்பெற்ற கொழும்பு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டோரில் இவரும்ஒருவர்.தனது தந்தையாரின் உதவியுடன் இந்தவலைப்பூவை பதிந்து வருகிறாராம்.பதிவர் சந்திப்பை நேரடியாக இணையப்பரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இவரை பிரத்தியேகமாக கேள்வி கேட்டதும் சிறப்பம்சம்.






























தந்தையுடன் தனையன்....
தந்தையாரின் வலைப்பூ இங்கே
இவர் மேலும் பூங்கா மற்றும் தான் பயிலும் கல்லூரியான D.S.S.C ற்கும் பதிவிடுகிறார்
இவருடைய முயற்சிக்க சகபதிவர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்....இன்றய இளையதலைமுறைக்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.

Read more...

முதல் பதிவர் சந்திப்பு + முதல் பதிவு














எனது முதலாவது பதிவே வலைப்பதிவு சம்பத்தப்பட்டதொன்றாகிவிட்டது.
இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் ஒன்றுகூடல் அண்மையில் இடம்பெற்றது.இதைப்பற்றி நான் சொல்வதைவிட இவர்கள்என்ன சொல்கிறார்கள் என கேளுங்கள்....

புல்லட்:
முதலாவதிலேயே கலக்கிட்டமில்ல...
லோஷன் : முதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவல்கள் சில படங்கள்

வந்தியத்தேவன் : நாம் சாதித்துவிட்டோம்
சுபானு : வரலாற்றின் பக்கங்களில் முதலாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு
பால்குடி : இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை

ஒன்றுகூடலின் உச்சகட்டம் அங்கு இடம்பெற்ற யாழ்தேவி திரட்டி மற்றும் தமிழ் ஒறுங்குறி தொடர்பான கருத்துப்பரிமாற்றமே....இதன் போது இணையபரப்பினை நேரடியாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவர்களும் இணைந்திருந்தமை ஒரு சிறப்பம்சம்.

அவ்வாறு பங்கேற்ற ஒரு பதிவரான வசந்தனின் விமர்சனம் இங்கே...


இனி அசரீரியின் பார்வை....













சிறப்புவிருந்தினர் உரை

பல முகம் தெரியாத பதிவர்களை சந்தித்தது பெருமகிழ்ச்சி. அதிலும் வந்திருந்த பதிவர்களில் (கிட்டத்தட்ட 75 பேர்) 9 பேர் மட்டுமேதாய்குலங்கள்.தமிழ் பெண் எழுத்தாளர்கள் எமது நாட்டில் குறைவாகவே உள்ளார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சமாகியது.






















வந்திருந்த
+ வருகை தரும் பெண் பதிவர்கள்


இலங்கையின் மிகவும் வயது குறைந்த பதிவர் ஒருவரும் தனது தந்தையுடன் வந்திருந்தது சிறப்பம்சம்.















குட்டிப்பதிவர்
தந்தையுடன்















ஒலிவாங்கியை மட்டுமல்ல ஒளிவாங்கியையும்(தமிழாக்கம்பிழைத்திருந்தால் பொறுத்தருள்க)
கையாளத்தெரிந்தவர்.














தற்போது
புல்லட்டின் கையில்

ஒன்றுகூடல் எந்தவித குழறுபடியும் இல்லாமல் நடந்து முடிந்ததே பெரு வெற்றி.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP