9/10/2009

9/11 நடந்தது என்ன?














Septemper 11,2001 அமெரிக்கர்கள் மட்டுமல்ல முழு உலகமும் மறக்கமுடியாத ஒருநாள். அன்று நிகழ்ந்த தீவிரவாததாக்குதல் Boeing 757 ரகத்தை சேர்ந்த விமானத்தை கடத்தியே தாக்கியதாக செய்திகள் வெளியானது. அனால் தாக்குதலின் போதும் அதன் பின்பும் எடுத்த புகைப்படங்கள் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுவாக விமானங்கள் விபத்துகளுக்குள்ளாகும்போது அவற்றின் சிலபாகங்கள் முற்றாக சிதைவடைவதில்லை. குறிப்பாக அதன் வால் மற்றும் உந்து விசிறிகள் என்பன எப்படியும் தடயங்களாக அம்பிடும். ஆனால் பென்ரகனில் இது போன்ற எதுவும் தட்டுப்படவில்லை.





விபத்துக்குளாகி எரிந்துபோன விமானமொன்று (தலைகீழாக கவிழ்ந்துள்ளது)

விமானங்கள் தரையில் மோதிவிபத்துக்குள்ளானால் அந்த இடத்தில் பாரிய எரிந்த சுவடுகள் காணப்படும்.


































பென்ரகனில் அவ்வாறொன்றும் தென்படவில்லை.












விமான விபத்தொன்றின்போது ஏற்பட்ட சுவடு (எரியாத வால் பகுதி, உந்து விசிறிகளை காணலாம்)


இதேவேளை Boeing 757 விமானம் என்பதே இந்த சந்தேகத்தை தோற்றுவித்துளது.

பென்ரகனில் Boeing 757 விமானம் மோதுவதாக வெளியிடப்பட்ட காட்சிகள்




























































1982 முதல் சேவையில ஈடுபடுத்தப்பட்டிருக்கும் Boeing 757 ரக விமானத்தின் இரு இறக்கைகளுக்கிடப்பட்ட தூரம் கிட்டத்தட்ட 125 அடி.




விமானம் மோதுண்டு இடிந்து போன பகுதி அளவில் சிறியதாக இருத்தல் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

















விமானத்தின் மூக்கு நுனியிலிருந்து வாலிற்கு இடைப்பட்ட தூரம் கிட்டத்தட்ட 155 அடி. தரையில் இருந்து 35000 அடி உயரத்தில் மணிக்கு 850 km வேகத்தில் பறக்கக்கூடியது.

















மோதியதில் E-Ring பகுதியிலேயே பிரதான சேதம் ஏற்பட்டுள்ளது. அதுவும் சிறியதொரு பகுதி மாத்திரமே. இவ்விடத்தில் உலக வத்தக மையத்தின் ஒவ்வொரு கட்டடமும் தனியே ஒரு விமானம் மோதியதாலேயே முற்றாக இடிந்து வீழ்ந்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று விமானத்தின் எரிபொருள் எரிந்து வெளிவந்த வெப்பம்.

அனால் பென்ரகனில் மோதிய விமானத்தால் ஒரு சிறிய பகுதி மட்டுமே உடைந்து வீழ்ந்துள்ளது. பென்ரகனின் மீது மோதிய Flight 77 என்ற வத்தகப்பெயருடைய அந்த விமானம் அன்று வோஷிங்ரன் டலஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3680 km தூரத்திலுள்ள லொஸ் எஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு பறப்பதாயிருந்தது.

Boeing 757 விமானம் எரிபொருள் தாங்கி 43500 லீற்றர் எரிபொருளை கொள்ளக்கூடியது. புறப்பட்டு சில நேரத்திலேயே பென்ரகனின் மீது மோதியிருப்பதால் எவ்வளவு பாரிய சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு ஏற்பட்டதோ ஒப்பீட்டில் மிகச்சிறிய சேதம்.

தாக்குதலின் பின் CNN ஆல் ஒளிபரப்பப்பட்ட காணொளியை பாருங்கள்



விமானத்தாகுதல் இடம்பெற்று இடிந்து விழுந்துள்ள இடத்தை பாருஙுகள்.இடிந்து விழாதுள்ள இடத்தயும் பாருங்கள். பாரியதீ தோன்றியதுக்கான தடமே இல்லை.

அது தரைக்கு மிக அருகாமையில் மிகவேகமாக பறந்து வந்து மோதியது என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
தரைக்கு அண்மையாக பறக்கும் Boeing 747 ரக விமானம். இந்த மெதுவான வேகத்தையும் அதனால் ஏற்படுத்தப்பட்டும் உரத்த ஒலியையும் கவனிக்கப்பட வேண்டியவை.



தரைக்கு அண்மையாக பறக்கும் Airbus A310 விமானமொன்று.
மேலும் சில

1)http://www.youtube.com/watch?v=UJULO94QOU4
2) http://www.youtube.com/watch?v=sTMC_EcrAz0

பொதுவாக விமானங்கள் தரைக்கு மிக அண்மையாக பறக்கும்போது தரை விளைவு (Ground Effect) தோன்றும். இதனால் எவ்வளவு வலுவுள்ள உந்து விசிறிகள் இருந்தாலும் அதன் சராசரி வேகத்திலும் மிகக்குறைவாகவே இருக்கும் (அண்ணளவாக 500 km/h). தரை விளைவு தொடர்பான விக்கியின் விளக்கம் இங்கே. பென்ரகன் தாக்குதலில் தரை விளைவு தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்று இங்கே

எனினும் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவில் பதிவான காட்சியில் அது விமானம் போன்று இல்லாமல் ஏதோ ஏவுகணை போலுள்ளது. அது பென்ரகன் கட்டடத்தொகுதியை அணுகும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக அதன் பின்புறத்தில் வெளிவிட்டபடி வரும் வெண்நிறபுகை இன்னும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது.



















மேலே C-Ring பகுதியில் வட்டமிடப்பட்டுள்ளது ஏதொ நிழல் என நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட 12 அடி விட்டமுள்ள பாரிய துவாரமே அது.













































விமானம் ஒன்று மோதி இவாறு ஒரு பாரிய துவாரம் மோதுவதற்கு வந்த அதே நேர்கோட்டில் எப்படி வந்தது?

உலகத்திலே மிகவும் பாதுகாப்பு கூடிய கட்டடங்களில் பென்ரகனும் ஒன்று. எத்தனை பாதுகாப்பு கமராக்கள் செயற்பட்டுகொண்டிருக்கும். பென்ரகனில் விமானம் மோதியது பென்ரகனுக்குரிய உலங்கு வானூர்தி இறங்குதளத்தினை கண்காணிக்கும் கோபுரத்திற்கு சற்று தொலைவிலேயே. எங்கு இல்லாவிட்டாலும் கட்டாயம் இங்காவது பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதில் விமானம் தாக்குவது எப்படியும் பதிவாகியிருக்கும். ஆனால் அப்படியொரு காட்சி இதுவரையில் வெளியிடப்படவில்லை.


வட்டமிடப்பட்டுள்ளது உலங்கு வானூர்தி இறங்குதள கண்காணிப்புக்கோபுரம். அம்புக்குறி விமானம் வந்ததாக சொல்லப்படும் (?) திசை.
9/11 குட்டுக்களை வெளிப்படுத்தும் இணையத்தளம் ஒன்று இங்கே


இந்த பென்ரகன் விடயமாக இணையங்களில் சிக்கிய சில தளங்கள்....
1) http://www.apfn.net/MESSAGEBOARD/06-14-04/discussion.cgi.51.html
2) http://www.aerospaceweb.org/question/conspiracy/q0274.shtml (தரை விளைவு பற்றியது)

Boeing 757 விமானம் பற்றிய விக்கியின் தகவல்கள் இங்கே
Flight 77 விமானம் பற்றிய விக்கியின் தகவல்கள் இங்கே

எனினும் பென்ரகன் சம்பவத்தின் பின்னர் சில Boeing 757 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளிவந்தன. எனினும் ஒருசில பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

அதில் ஒன்று விமானத்தின் சில்லில் டயர் எரிந்துபோக எஞ்சிய உலோகப்பகுதி.
மற்றையது உந்து விசிறியின் உள்ளே காணப்படும் பாகங்கள். விபரங்களுக்கு அவையவற்றின் மீது சொடுக்கவும்.

இவை மட்டும்தான் எஞ்சிய பாகங்கள் என்பது இன்னும் சந்தெகத்தை ஏற்படுத்துகிறது. இவை எவ்வாறாக இருப்பினும் அமெரிக்க அதிகாரிகள் இதில் ஏதொ ஒன்றை மட்டும் மறைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

யார்யாரோ போடும் சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவுகொளப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்நேரத்தில் அந்த கறுப்பு நாளில் உயிரிழந்த 2985 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதையும், அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதையும் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

Read more...

9/02/2009

வருகிறது ”2012”














இவன் யார்டா இவன்.அதுதான் இன்னும் 3 வருடத்தில் வருகிறதே என்கிறீர்களா?

ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இவ்வருடம் November 13 (இந்த வருடத்தின் மூன்றாவது Friday the 13th) அன்றும் ”2012” வருகிறதென்று???

Colombia Pictures வெளியீடாக வரும் ஒரு திரைப்படமே இந்த “2012”. Independence Day மற்றும் The Day After Tomorrow ஐ தந்த இயக்குனரான Roland Emmerich ன் இன்னுமொரு பிரம்மண்டமான படைப்பே இது. இப்படத்தின் முன்னொளியை பார்க்கும் போதே படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது.

2012 ல் யார் உயிர் பிழைப்பார் என மிரட்டுகிறது “2012” ன் உத்தியோகபூர்வ இணையத்தளம்

சில நாட்களுக்கு முன்தான் இந்த “2012” பெரும் புரளியை கிளப்பிவிட்டிருந்தது.அதாவது இவ்வுலகிலேயே மிக தொன்மையான நாகரீகமான மாயன் நாகரீகத்தில் உருவான ஒரு நாட்காட்டியாலேயே இவ்வளவு பிரச்சனைகளும்.காரணம் அந்த நாட்காட்டி 2012 December 21 உடன் முடிவடைவதுதான்.

அதனால் அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்று சில கருத்துக்கள் உலாவுகின்றன. மாயன் நாட்காட்டியில் உள்ள இது தொடர்பாக விக்கியிடம் கேட்டபோது 5125 வருடங்களை கொண்ட மாயன் நாட்காட்டியில் தற்போது நடந்து கொண்டிருப்பது 5122 வது வருடத்தில்.

இதற்கு முதல் சில இயற்கை அனர்த்தங்கள் மாயன் நாட்காடியில் குறிப்பிட்டது போல கிட்டத்தட்ட அந்தந்த திகதிகளில் நடந்திருக்கிறதாம்.அதனால்தான் மாயன் நாட்காட்டி முடிவடைவதுடன் உலகம் அழிந்துவிடும் என்று புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார் போலும்.

எது எவ்வாறாயினும் நல்லதாகவே நடக்கட்டும் என பிரார்த்திப்போமாக....

Read more...

8/25/2009

இலங்கையின் இளையபதிவர்

முதலில் இந்த வலைப்பூவை முதலில் சென்று முழுமையாக வசித்து விட்டு மேலே தொடரவும்.



இந்த
வலைபூவை பதிபவர் கொழும்பு D.S. சேனாநாயக்க கல்லூரியில் தரம் 6 கல்விபயிலும் மாணவன் யசீர் நிஸாருதீன்
.அண்மையில் இடம்பெற்ற கொழும்பு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டோரில் இவரும்ஒருவர்.தனது தந்தையாரின் உதவியுடன் இந்தவலைப்பூவை பதிந்து வருகிறாராம்.பதிவர் சந்திப்பை நேரடியாக இணையப்பரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இவரை பிரத்தியேகமாக கேள்வி கேட்டதும் சிறப்பம்சம்.






























தந்தையுடன் தனையன்....
தந்தையாரின் வலைப்பூ இங்கே
இவர் மேலும் பூங்கா மற்றும் தான் பயிலும் கல்லூரியான D.S.S.C ற்கும் பதிவிடுகிறார்
இவருடைய முயற்சிக்க சகபதிவர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்....இன்றய இளையதலைமுறைக்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.

Read more...

முதல் பதிவர் சந்திப்பு + முதல் பதிவு














எனது முதலாவது பதிவே வலைப்பதிவு சம்பத்தப்பட்டதொன்றாகிவிட்டது.
இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் ஒன்றுகூடல் அண்மையில் இடம்பெற்றது.இதைப்பற்றி நான் சொல்வதைவிட இவர்கள்என்ன சொல்கிறார்கள் என கேளுங்கள்....

புல்லட்:
முதலாவதிலேயே கலக்கிட்டமில்ல...
லோஷன் : முதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவல்கள் சில படங்கள்

வந்தியத்தேவன் : நாம் சாதித்துவிட்டோம்
சுபானு : வரலாற்றின் பக்கங்களில் முதலாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு
பால்குடி : இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை

ஒன்றுகூடலின் உச்சகட்டம் அங்கு இடம்பெற்ற யாழ்தேவி திரட்டி மற்றும் தமிழ் ஒறுங்குறி தொடர்பான கருத்துப்பரிமாற்றமே....இதன் போது இணையபரப்பினை நேரடியாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவர்களும் இணைந்திருந்தமை ஒரு சிறப்பம்சம்.

அவ்வாறு பங்கேற்ற ஒரு பதிவரான வசந்தனின் விமர்சனம் இங்கே...


இனி அசரீரியின் பார்வை....













சிறப்புவிருந்தினர் உரை

பல முகம் தெரியாத பதிவர்களை சந்தித்தது பெருமகிழ்ச்சி. அதிலும் வந்திருந்த பதிவர்களில் (கிட்டத்தட்ட 75 பேர்) 9 பேர் மட்டுமேதாய்குலங்கள்.தமிழ் பெண் எழுத்தாளர்கள் எமது நாட்டில் குறைவாகவே உள்ளார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சமாகியது.






















வந்திருந்த
+ வருகை தரும் பெண் பதிவர்கள்


இலங்கையின் மிகவும் வயது குறைந்த பதிவர் ஒருவரும் தனது தந்தையுடன் வந்திருந்தது சிறப்பம்சம்.















குட்டிப்பதிவர்
தந்தையுடன்















ஒலிவாங்கியை மட்டுமல்ல ஒளிவாங்கியையும்(தமிழாக்கம்பிழைத்திருந்தால் பொறுத்தருள்க)
கையாளத்தெரிந்தவர்.














தற்போது
புல்லட்டின் கையில்

ஒன்றுகூடல் எந்தவித குழறுபடியும் இல்லாமல் நடந்து முடிந்ததே பெரு வெற்றி.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP